பணம், நகை, மது, குக்கர், சேலை, லேப்டாப்... தெலங்கானாவில் ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

பணம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி ரூ.71 கோடி மதிப்புள்ள பணம், நகை, போதைப்பொருட்கள், குக்கர், சேலை, மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம், மதுபானம், பரிசுப்பொருட்கள், போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து மாநிலம் முழுவதும் ரொக்கம், நகைகள், மதுபானம் உள்ளிட்ட பிறபொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

அவர்களுடன் காவல் துறை, வருமான வரித்துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானாவில் இதுவரை பணம், தங்கம், மதுபானம் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.71.73 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் ரூ.29.31 கோடி ரொக்கத்தை கைப்பற்றியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் ரூ.12.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 9.54 கோடி மதிப்பிலான 3.62 லட்சம் லிட்டர் மதுபானங்களை அமலாக்கத் துறையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். முந்தைய வாரத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை ரூ.15.49 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, ஆபரணங்களின் மதிப்பு ரூ.10.33 கோடியாகும். மேலும் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் மடிக்கணினி, குக்கர், சேலை போன்ற இலவச பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.04 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in