பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா மீண்டும் அரசியல் பிரவேசம்... ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இணைந்தார்

ஷிண்டே முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவிந்தா
ஷிண்டே முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவிந்தா

பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார்.

பாலிவுட் நடிகர்களின் மத்தியில் மும்பை மண்ணின் மைந்தராகவும், 90களின் முன்னணி நடிகராகவும் விளங்கியவர் கோவிந்தா. அரசியல் ஆர்வம் உடைய இவர், சகல கட்சிகளிலும் நண்பர்களை வைத்திருக்கிறார். சினிமாவுக்கு அப்பால் மும்பை மக்களின் அபிமானத்தை பெற்றவர் என்பதால், அவரது அரசியல் வருகைக்கும், பிரச்சாரத்துக்கும் தேர்தல் தோறும் எதிர்பார்ப்பு நிலவும்.

கட்சியில் இணையும் நிகழ்வில் கோவிந்தா; உடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
கட்சியில் இணையும் நிகழ்வில் கோவிந்தா; உடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட பலர் முண்டியடித்தபோதும், கட்சிக்கு அப்பால் கவர்ச்சிகரமான முகத்தை தேடி வந்தார் ஏக்நாத் ஷிண்டே. தனிப்பட்ட ஒரு தொகுதியின் வேட்பாளராக மட்டுமன்றி, கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் கூட்டம் சேர்க்கும் நட்சத்திரமாக அமைய வேண்டும் என்று விரும்பினார். ஏக்நாத் ஷிண்டே சார்பில் கட்சியின் பிரமுகரான கிருஷ்ணா ஹெட்ஜ், கோவிந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் கோவிந்தா நேரில் சந்தித்ததும் அவரது அரசியலின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவானது. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கோவிந்தா பிரசாரம் மட்டுமன்றி, 2004 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ராம் நாயக்கை தோற்கடித்தார். அதன் பின்னர் அரசியல் அலுத்ததில், காங்கிரஸில் இருந்து விலகியதோடு ஒட்டுமொத்தமாக அரசியலுக்கும் முழுக்கு போட்டிருக்கிறார்.

நடிகர் கோவிந்தா
நடிகர் கோவிந்தா

இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களின் செல்வாக்கு பாலிவுட்டில் அதிகரித்ததில், அடுத்த இன்னிங்ஸாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இன்று இணைந்திருக்கிறார். இதற்கான மும்பையில் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற விழாவில் பேசிய கோவிந்தா, “நான் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தேன். ஆனால் கடவுளின் ஆசிர்வாதம் வேறாக இருக்கிறது” என நெகிழ்ந்தார். ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளராக, மும்பை வடமேற்கு தொகுதியில் கோவிந்தா போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in