அமைச்சர் உதயநிதியுடன் பிரபல சமூக செயற்பாட்டாளர் வெளிமன்னா சந்திப்பு

அமைச்சர் உதயநிதியுடன் பிரபல சமூக செயற்பாட்டாளர் வெளிமன்னா சந்திப்பு

சென்னையில் அமைச்சர் உதயநிதியை மாற்றுத்திறனுள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் ஆசிம் வெளிமன்னா சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் தான். ஆசிம் வெளிமன்னா. இவருடைய பெயரிலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. 90 சதவீதம் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட ஆசிம், இரு கைகள் இல்லாமல் பிறந்தவர். தாடை எலும்பு வளைந்து, பற்கள் வாய் மற்றும் செவிப்புலன் ஆகியவற்றில் அவருக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் தனது உடல் குறைபாட்டை பற்றி சற்றும் கவலைப்படாமல் தன்னைப் போன்று உள்ள பல குழந்தைகளுக்காக இவர் தொடர்ச்சியாக போராடி வருகிறார். யூனிசெப் வழங்கும் குழந்தை சாதனையாளர் விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உஜ்வாலா பாலியம் விருது இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது, அதேபோல ஊக்கமளிக்கும் இந்தியா விருதும் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "கோழிகோடை சேர்ந்த தம்பி அசிம், தன்னை போலவே மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். அதன் மூலம் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகிறார்.

சென்னை வருகை தந்துள்ள தம்பி வெளிமன்னா, அவரது குடும்பத்தாருடன் இன்று நம்மை சந்தித்து அன்பை வெளிப்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்து அவர் எடுத்துவரும் முன்னெடுப்புகளை கேட்டறிந்து, அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்தினோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in