ஹேமமாலினியை அநாகரிகமாக பேசியதாக சர்ச்சை... காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஹேமமாலினி
ஹேமமாலினி

மூத்த நடிகையும் பாஜக வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து, அநாகரிகமாக பேசியதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா என்பவர் மீது பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இந்த புகாரின் கீழ் காங்கிரஸ் தலைமைக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் விடுத்துள்ளது.

முந்தைய தலைமுறையினரின் கனவுக்கன்னியருள் ஒருவர் ஹேமமாலினி. ஸ்ரீதேவி வரிசையில் தமிழகத்தில் பிறந்து பாலிவுட் வெற்றிக்கொடி பறக்க விட்டவர். இவர் அரசியலில் குதித்ததில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் பாஜக எம்பியாக 2 முறை வென்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் மதுராவில் போட்டியிடுகிறார்.

ரந்தீப் சுர்ஜேவாலா - ஹேமமாலினி
ரந்தீப் சுர்ஜேவாலா - ஹேமமாலினி

பாஜக சார்பில் மதுரா தொகுதியில் ஹேமமாலினி மீண்டும் களமிறங்குவதை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுர்ஜேவாலா விமர்சித்திருந்தார். அது தொடர்பாக பாஜக வெளியிட்டிருந்த வீடியோவில் பேசும் சுர்ஜேவாலா, “மக்கள் ஏன் தங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளை தேர்வு செய்கிறார்கள்? தங்கள் குரலை அந்த மக்கள் பிரதிநிதிகள் எதிரொலிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஹேமமாலினியோ..” என்று சர்ச்சைக்குரிய வகையில் சுர்ஜேவாலா பேச்சு நீள்கிறது.

இந்த வீடியோ பொதுவெளியில் பரவி சர்ச்சைகளை கூட்டியது. ”இது நீண்ட உரையின் வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பு. சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஷமிகள் திரித்த வீடியோ. தயவுசெய்து முழு வீடியோவை பாருங்கள். நான் எந்த வகையில் ஹேமமாலினியை அவதூறு செய்யவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மிகுந்த மரியாதை உள்ளது” என்று சுர்ஜேவாலா விளக்கமளித்தார்.

ஆனால் பாஜக் ஐடி செல் வைரல் முயற்சிகளுக்கு முன்பாக சுர்ஜேவாலா குரல் எடுபடவில்லை. இந்த தாக்குதலில் ஹேமமாலினியும் சேர்ந்து கொண்டார். "பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபலமானவர்களையே காங்கிரஸ் குறிவைக்கிறது. ஏனெனில் பிரபலமற்றவர்களை குறிவைப்பதால் அவர்களுக்கு பயனிருக்காது என்பதே இதற்கு காரணம்” என்று தாக்கினார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இவற்றை அடுத்து இந்த விவகாரத்தை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் சுர்ஜேவாலாவை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கேக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “மேற்கண்ட கருத்துக்கள் கண்ணியமற்றவை, கொச்சையானவை மற்றும் நாகரீகமற்றவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலும் ஹேமாமாலினிக்கு பெரும் அவமானத்தையும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அவமரியாதையையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பில் உள்ள பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், பொது வாழ்வில் உள்ள பெண்கள் மற்றும் பொதுவாக அனைத்து பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியத்திற்கு இவை கேடு விளைவிக்கின்றன. ஆணையம் உங்கள் மட்டத்தில் கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும், காங்கிரஸின் பிரச்சாரகர்கள் இன்னும் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை வெறுக்கும் பேச்சுகளில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது" என்று தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in