29 கட்சிகள்; 640 நட்சத்திரப் பேச்சாளர்கள்... பிரச்சார அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்!

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய உள்ள அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பிரச்சார அனுமதி வழங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது.

உதயநிதி
உதயநிதி

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்  திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. இது தவிர ஏராளமான சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் சார்பிலும்  அதன் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்கிற வீதியில் தினமும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .இதேபோல பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும்  பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தங்கள் கட்சிகளின் சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து  கட்சிகள் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழ்நாட்டில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில்  மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட  40 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர். பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன்,  ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இவர்கள் அனைத்து தொகுதிகளிலும் சென்று பிரச்சாரம் செய்யும் அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இவர்களின் பிரச்சாரத்திற்காகச்  செய்யப்படும் செலவு அந்தந்த வேட்பாளர் களின் கணக்கில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in