அதிமுக நிர்வாகிக்கு கட்டம் கட்டிய ஈபிஎஸ்...பரபரக்கும் பின்னணி!

எடப்பாடி பழனிசாமியுடன் செல்லப்பாண்டியன்
எடப்பாடி பழனிசாமியுடன் செல்லப்பாண்டியன்

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான சி.த.செல்லப்பாண்டியை அப்பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.

சி.த.செல்லபாண்டியன் (பைல் படம்)
சி.த.செல்லபாண்டியன் (பைல் படம்)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர்அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் பேசினார்.

அப்போது அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உள்ளிட்டோரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில்அவர் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சி.த.செல்லபாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து செல்லப்பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீஸீல் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

இந்த நிலையில், செல்லப்பாண்டியன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு வர்த்தக அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திமுகவினர் தொடுத்த வழக்கில் இருந்து சி.த.செல்லப்பாண்டியன் பின் வாங்கியதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அதிமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in