எங்க கிட்ட ஆதாரம் இருக்கு... திமுகவில் அடுத்த அமைச்சரை வளைக்கும் அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கு, தங்களிடம் ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிர்நாடு அரசில் மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக உள்ளவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அமலாக்கத்துறை சார்பில் தங்களையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக நடத்தப்பட்ட விசாரணை என்பது முழுமையாக நடைபெறவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இந்த வழக்கை முழுமையாக முடிப்பதற்கு, முறைகேடாக 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்து விசாரிக்க, அனுமதி தர வேண்டும் என அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நீதிமன்ற வளாகம்
தூத்துக்குடி நீதிமன்ற வளாகம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை வருகிற நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை குறி வைத்து, தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பழைய வழக்கில், தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in