ஆச்சரியம்... ஒரு நாள் பிரிட்டன் தூதரானார் சென்னை இளம்பெண்!

ஸ்ரேயா தர்மராஜன்
ஸ்ரேயா தர்மராஜன்

சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஸ்ரேயா தர்மராஜன், இந்தியாவுக்கான இங்கிலாந்து ‘ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி’ ஆகியுள்ளார்.

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 'ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி' என்ற போட்டியை நடத்தி வருகிறது.

சர்வதேச பெண் குழந்தை தினத்தை (அக்டோபர் 11-ந்தேதி) கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஸ்ரேயா தர்மராஜன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் ஒரு நாள் முழுவதும் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக உயர் அதிகாரியாக ஆனார்.

ஸ்ரேயா தர்மராஜன்
ஸ்ரேயா தர்மராஜன்

இந்த போட்டியின் மூலம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரியான 7-வது பெண் ஸ்ரேயா தர்மராஜன் ஆவார். டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள ஸ்ரேயா, தற்போது மும்பையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in