பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
Updated on
2 min read

மைசூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் மீது கல்வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மைசூரு ராமகிருஷ்ணா நகரில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் முதல்வர் சித்தராமையா மைசூரு வரும்போது தங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மைசூரு வந்த முதல்வர் அங்கே தங்கினார். இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில் ராமகிருஷ்ணா நகரில் உள்ள சாலையில் நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் அருகே கிடந்த கல்லை எடுத்து திடீரென முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது வீசினார்.

இதில், வீட்டின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சத்தத்தை கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஒருவர் தப்பியோடியதைக் கண்டு, அவரை போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் மைசூரு டவுன் சத்யமூர்த்தி என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், கைதான சத்தியமூர்த்தி கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குசாவடியில் ஓட்டு போட சென்றபோது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்துள்ளார். மேலும் மைசூரு மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத்தை, ரவுடி ராஜேந்திரன் என போஸ்டர் அடித்து ஓட்டினார். இதுதொடர்பாக போலீசார் அவர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சத்யமூர்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது

குற்றம்சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி
குற்றம்சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி

தற்போது 3-வது சம்பவமாக முதல்வர் சித்தராமையா வீட்டில் சத்யமூர்த்தி கல் எறிந்து தாக்குதல் நடத்தி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களை அழைத்து சத்யமூர்த்தி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மைசூருவில் முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in