நடிகர் அஜித்தை பொன்னியின் செல்வனாக மாற்றிய ரசிகர்கள்... கலக்கல் ஏஐ புகைப்படங்கள்!

காமதேனு

நடிகர் அஜித்தை பொன்னியின் செல்வனாக அவரது ரசிகர்கள் ஏஐ மூலம் மாற்றியுள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரசிகர்கள் சமீபத்தில் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

நடிகர் அஜித்

அதன்படி, சமீபத்தில் ‘பாகுபலி’ தேவசேனையை பாகுபலியுடன் சேர்த்து வைக்கும்படியான ஏஐ புகைப்படங்களும், பார்பி உலகிற்குள் கோலிவுட் நடிகர்கள் நுழைந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகியது. அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்தை ராஜ ராஜ சோழனாக ரசிகர்கள் மாற்றி இருக்கின்றனர்.

நடிகர் அஜித்

கம்பீரமான மன்னனாக, ராஜராஜ சோழனாக கையில் செங்கோல் ஏந்தி தலையில் கிரீடத்துடன் தஞ்சை பெரிய கோயிலைப் பார்ப்பது போன்றும் மக்கள் மத்தியில் கம்பீரமாக நடைபோடுவது போன்றும் இருக்கும் ஏஐ புகைப்படங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்