கேஆர்பி அணை
கேஆர்பி அணை

நிரம்பிய கேஆர்பி அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 50 அடியை எட்டியதால் அணையில் இருந்து 1176 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேஆர்பி அணை
கேஆர்பி அணை

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்று கடலூரில் கடலில் கலக்கிறது.

இந்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த கேஆர்பி அணை தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது 50.50 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் மொத்த நீரும் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றின் கரையை கடக்கவோ, ஆற்றுக்குள் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in