புனித நாள்... ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றிய தேர்தல் ஆணையம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை

5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் தேர்தல் தேதியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிஜோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

5 மாநில தேர்தல் தேதிகளை அறிவிக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள்
5 மாநில தேர்தல் தேதிகளை அறிவிக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள்

அதன்படி, ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராஜஸ்தானில் புனிதநாளாக கருதப்படும் தேவ உதானி ஏகாதசி நாளாகும். எனவே, அன்று திருமணங்கள், விழாக்கள், விசேஷங்கள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் தேர்தல் தேதியை மாற்ற பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதை ஏற்று ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதிக்கு பதில் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முன்பே அறிவிக்கப்பட்டதை போல, டிசம்பர் 3-ல் நடக்க உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in