ஹெச்.ராஜாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை... டாக்டர்கள் பரிந்துரை!

ஹெச்.ராஜாவை நலம் விசாரித்த தமிழிசை
ஹெச்.ராஜாவை நலம் விசாரித்த தமிழிசை

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருககு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சு திணறலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவர்கள் உடல்நிலையைப் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஹெச்.ராஜாவுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹெச்.ராஜாவை புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in