வாஸ்து சரியில்லையா... திறந்த நான்கே நாளில் மூடப்பட்ட தஞ்சை திமுக பணிமனை!

தஞ்சையில் திமுக பணிமனை மூடல்
தஞ்சையில் திமுக பணிமனை மூடல்

தஞ்சையில் திறக்கப்பட்ட 4 நாட்களில் திமுக பணிமனை மூடப்பட்டது திமுக கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். இதையடுத்து தஞ்சை ஆற்றுப்பாலம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் எதிரே கடந்த 25-ம் தேதி தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

தஞ்சை கலைஞர் அறிவாலயம்
தஞ்சை கலைஞர் அறிவாலயம்

இதைத் தொடர்ந்து நடப்பு எம்பி-யான எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உள்ளிட்டோருடன் சென்று நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் முரசொலி. இதைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து தேர்தல் பரப்புரையை துவங்கி உள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதனிடையே தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரின் பணிமனை திறந்து நான்கு நாட்களிலேயே திடீரென மூடப்பட்டுள்ளது.

தஞ்சையில் 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட திமுக பணிமனை மூடல்
தஞ்சையில் 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட திமுக பணிமனை மூடல்

அலுவலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்கள், கொட்டகை , ஆகியவை பிரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திமுகவினரிடம் கேட்டபோது, வேட்பாளரின் செலவு கணக்கு கூடுதலாகும் என்ற காரணத்தால் பணிமனை பிரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உறுதியான காரணம் என்ன என்பது தெரியாததால், கூட்டணி கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒருவேளை வாஸ்து பார்த்து இடத்தையும் திசையையும் மாற்றி வேறு இடத்தில் தேர்தல் பணிமனையை திறக்கலாம் என்ற பேச்சும் தஞ்சை திமுக வட்டாரத்தைச் சுற்றுகிறது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in