திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு நிறுத்திவைப்பு... நீலகிரியில் பரபரப்பு!

 ஆ.ராசா
ஆ.ராசா

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முக்கிய வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரது மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் மனுவில் ஆட்சேபம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததால் அவரது வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆ.ராசா
ஆ.ராசா

இதேபோல் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்பு மனுவில் சில தவறான தகவல்கள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரது மனுவும் நிறுத்திவைக்கப்பட்டது. அதேசமயம், அதிமுக சார்பில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த சூண்டி கார்த்திக்கின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நீலகிரி தொகுதியில் தாக்கலான 33 வேட்பு மனுக்களையும் முழுமையாக பரிசீலித்த பிறகு, அதன் பின்னர் திமுக, அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆ.ராசா மனு நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக உதகை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

டெய்ல் பீஸ்: வேட்பு மனுவில் கூடுதலாக சில தகவல்களை சேர்க்கவில்லை என்று சொல்லித்தான் இருவரது மனுக்களும் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், இறுதிக்கட்ட பரிசீலனையில், இருவரும் தாக்கல் செய்த ஆவணங்களே போதுமானது என ஆட்சியர் தெரிவித்ததால் இருவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in