இங்கு இருந்துதான் டெங்கு, மலேரியா உற்பத்தி- அலுவலகம் முன் வாசகம் எழுதி வைத்த மின்வாரிய ஊழியர்கள்

சென்னை மாநகராட்சி எதிராக எழுதி வைத்துள்ள வாசகம்
சென்னை மாநகராட்சி எதிராக எழுதி வைத்துள்ள வாசகம்

சென்னை நுங்கம்பாக்கம் மின் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில், மின்வாரிய ஊழியர்கள் சென்னை மாநகராட்சி எதிராக எழுதி வைத்துள்ள வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொசுத் தொல்லை அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கடி அடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் முறையாக மருந்து அடிப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என கூறி அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஊழியர்கள், ‘’ நுங்கம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்துதான் சென்னைக்கு டெங்கு மற்றும் மலேரியா விநியோகிக்கப்படுகிறது’’ என எழுதியுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in