டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி நடக்கிறது... அர்விந்த் கேஜ்ரிவால் அலறல்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

"டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. ஆனால் அதற்கு, டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்தபடியே டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார் கேஜ்ரிவால். அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிதி முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுர்ஜித் சிங் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது “ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது என்று தடை உள்ளதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி மன்மோகன், "டெல்லியில் நிர்வாக பிரச்சினை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், ”மதுபானக் கொள்கை வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டுமென்றே அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. ஆனால், டெல்லி மக்கள் அதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in