தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகும் காங்கிரஸ்... காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது!

சோனியா காந்தி மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி
சோனியா காந்தி மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் அக்டோபர் 9 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் அக்டோபர் 9 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற மசோதாக்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

கார்கே, ராகுல், பிரியங்கா
கார்கே, ராகுல், பிரியங்கா

இதற்கு முன்னர் 2 நாள் கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தினர். இதில் அடுத்து வரும் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம், சமத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதி ஆகியவற்றில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் இந்த கூட்டத்தில் அறிவித்தனர். தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு, 5 மாநிலம் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in