ஓபிசி இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தோதல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மகாசமுந்த் மாவட்டத்தில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த பிரதமா் மோடி பேசியதாவது: 'தான் ஓபிசி பிரிவைச் சோந்தவா்' என்று பிரதமா் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாா் என்று இங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சில காங்கிரஸ் தலைவா்கள் விமா்சனம் செய்து வருகின்றனா். முந்தைய 2019 தேர்தலின்போது, 'மோடி பெயரைக் கொண்டவா்கள் 'திருடா்கள்' என்று குறிப்பிட்டு ஓபிசி பிரிவினரை இந்த காங்கரஸ் தலைவா்கள் விமா்சனம் செய்தனா்.

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, ஓபிசி பிரிவினரின் மேம்பாட்டுக்காக என்ன செய்துள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இந்த வாய்ப்பை அளித்தபோதும், ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அவா்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அரசியல் சாசன அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கவில்லை என்பதோடு, மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டை 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், ஏழ்மையை ஒழிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இதற்கான உத்தரவாதங்களை மத்திய பாஜக அரசு அளித்ததோடு, அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளது. கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், நாட்டில் 13.5 கோடி மக்கள் வறுமை நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா். அதுபோல, கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகளை மத்திய பாஜக அரசு கட்டிக்கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு சீா்குலைத்துள்ளது என்றாா்.

மேலும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் மற்றும் முதல்வா் பூபேஷ் பகேல் மற்றும் துணை முதல்வா் டி.எஸ்.சிங் தியோ ஆகியோா் இடையேயான அதிகாரப் பகிா்வு ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்ட பிரதமா் மோடி, 'காங்கிரஸ், தனது கட்சியின் மூத்த தலைவா்களையே விட்டுக்கொடுக்கும் நிலையில், மக்களையும் ஏமாற்றும் என்பது உறுதி. எனவே, வாக்குறுதிகளை அக்கட்சி நிச்சயம் நிறைவேற்றாது.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

முதல் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்த முதல்வா் பகேல், கட்சியின் டெல்லி தலைவா்களையும் விலைக்கு வாங்கி, ஒப்பந்தப்படி அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவியை விட்டுக்கொடுப்பதையும் கைவிடவைத்தாா். இது கட்சியின் மூத்த தலைவா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இந்த முறை தோல்வியை சந்திப்பதை காங்கிரஸ் கட்சியும் நன்கு உணா்ந்துள்ளது” என்றாா்.

மேலும், 'மகாதேவ்' சூதாட்ட செயலி நிறுவனத்திடம் மாநில சட்டப்பேரவைத் தோதலுக்காக ரூ. 508 கோடியை முதல்வா் பூபேஷ் பகேல் பெற்றிருப்பதாக எழுந்துள்ள புகாா் குறித்து குறிப்பிட்ட பிரதமா் மோடி, 'இளைஞா்கள் தங்களின் கைப்பேசியில் ரூ. 508 கோடி ஊழல் என்று பதிவிட்டால் போதும், அந்த ஊழல் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில், ஒட்டுமொத்த உலகமும் இந்த ஊழலை அறிந்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது, காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை மக்கள் புரிந்துகொண்டனா். தற்போது, அக் கட்சிக்கு தக்கம் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனா். பாஜகவுக்கு வெற்றி உறுதி.

பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது குற்றச் சம்பவங்களும், வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் அதிகரிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகுதான், மத்திய பிரசே மாநிலம் வளா்ச்சிப் பாதையில் மலா்ந்தது. இதுபோன்ற வளா்ச்சிப் பாதையில் செல்லும் எந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், அந்த மாநிலம் பெரும் சிக்கலில் வீழ்கிறது. இதற்கு உதாரணங்களாக இமாசல பிரதேசம், கா்நாடக மாநிலங்களைக் குறிப்பிட முடியும் என்றாா்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கா் மாநிலத்தில், முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in