HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்! தன்னம்பிக்கை தேவதைக்கு பிறந்தநாள்

நடிகை மம்தா...
நடிகை மம்தா...

படங்களில் மட்டுமல்லாது நிஜத்திலும் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை மம்தா மோகன்தாஸ். சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, நிஜ வாழ்க்கையில் கேன்சருடன் போராடி வெற்றி என கெத்தாக வலம் வருபவருக்கு இன்று 39வது பிறந்தநாள். தன்னம்பிக்கை தேவதையாக பெண்களுக்கான உந்துசக்தியாக வாழ்ந்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

நடிகை மம்தா...
நடிகை மம்தா...

நடிக்க வருவதற்கு முன்பு தன் வாழ்க்கையை மாடலாகத் தொடங்கிய மம்தா. பல முன்னணி பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து, பின் நடிப்பின் மீதான ஆசையினால் சினிமாத் துறைக்குள் வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு ’மாயூகம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மம்தா, நடிகையாக மட்டுமல்லாது பல படங்களில் பாடகியாகவும் வலம் வருகிறார். ’அன்வர்’, ‘தி திரில்லர்’, ‘ராக்கி’ போன்ற படங்கள் அவர் பாடியவை.

நடிகை மம்தா...
நடிகை மம்தா...

மம்தாவுக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் அதிகம். ‘நடிகை என்பதையும் தாண்டி உடலைப் பேணுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதில் முடிந்தளவு சின்சியராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ள மம்தா, விஜயின் வில்லு படத்தில் இடம்பெற்ற ‘டாடி மம்மி’ பாடலைப் பாடியவர். அந்த சமயத்தில் பயங்கர ஹிட்டானது. அதன் பிறகு விஷாலுடன் ‘சிவப்பதிகாரம்’ படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.

நடிகை மம்தா...
நடிகை மம்தா...

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் மம்தா. இதனால், தன் ஊரை விட்டு வெளியேறி இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டார். தன்னம்பிக்கையோடு அதை போராடி வென்றவர் அந்த சமயத்தில் தனது குடும்பமும் நண்பர்களுமே மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகக் கூறினார். இதுகுறித்து ஒரு பேட்டியில், ”எனக்கு புற்றுநோய் வந்தபோது முதலில் எனது நண்பர்களிடம் தான் கூறினேன். அப்போது அவர்கள் எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள். ஆறுதலாக இருந்தார்கள்.

இருப்பினும் எனக்கு புற்றுநோய் வந்ததை எண்ணி எண்ணி வருத்தப்பட்டேன். இதனால் நான் தனிமையிலேயே இருந்தேன். இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். எப்போதும் கேமரா முன்பு இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். எங்கே நான் செத்து விடுவேனோ என்று பயந்து பயந்து வாழ்ந்தேன்.

நடிகை மம்தா...
நடிகை மம்தா...

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தவர், 'விட்டிலிகோ' என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

”எனது வாழ்க்கையில் சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது இன்னொரு புதிய பிரச்சினையுடன் போராடி வருகிறேன். நிச்சயம் இதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன்” எனக் கூறியவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

தன்னம்பிக்கை தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in