காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உயிரிழந்த சின்னக்காள்
உயிரிழந்த சின்னக்காள்

மதுரை அருகே காதலன் குடும்பம் காதலை ஏற்க மறுத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து மனமுடைந்த காதலி, மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்திரப்பட்டி அருகே கடவூரை  சேர்ந்த சின்னக்காள் (23) என்ற பெண் கூலி வேலை செய்து வந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த உறவினரான பாக்கியம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் கடந்த 2 வருடங்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில்  தீபாவளி அன்று காதலியை, காதலன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காதலனின் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்க மறுத்து, காதலியை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த காதலி சின்னக்காள் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்று அவர்  வீட்டின் அருகே உள்ள மரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மர்மமான முறையில் அவர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக  சத்திரப்பட்டி  காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு தற்கொலை வழக்கு பதியப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சின்னக்காள் இறக்க காதலனின் வீட்டில் உள்ளவர்கள் தாக்கியதே காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காதலன் பாக்கியம், அவரது தாய், தந்தை உள்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in