
சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 7 மற்றும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் வேட்பாளர் தேர்வு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தின் போது முதல்வர் பூபேஷ் பாகல் தனது செல்போனில் கேண்டி கிரஷ் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை பாஜக தேசிய ஐ.டி விங் ஒருங்கிணைப்பாளரான அமித் மல்வியா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்தே, அவர் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தாமல் கேண்டி கிரஷ் விளையாடியதாக கிண்டலாக தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், வேட்பாளர் தேர்வு கூட்டத்திற்கு முன் தான் கேண்டி கிரஷ் விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மாட்டு வண்டி ஓட்டுவது, கில்லி தாண்டா ஆடுவதைப் போல் கேண்டி கிரஷ்ஷும் தனக்குப் பிடித்தமான விளையாட்டு என கூறியுள்ள அவர், அன்றைய தினம் அந்த லெவலை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!