10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட்... கார்த்தி சிதம்பரம் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பி-யுமான கார்த்தி சிதம்பரம், தனது பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்துத் தரக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். ”கார்த்தி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது” என அவர் தெரிவித்தார். மேலும் ஓராண்டுக்கு மட்டுமே அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படும் எனவும் வாதிட்டார்.

கார்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். ”பாஸ்போர்ட் சட்ட விதிகளின் படி 10 ஆண்டுகளுக்கு சொல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற உரிமை உள்ளது” என அவர் தெரிவித்தார். அவ்வாறு புதுப்பிக்க மத்திய அரசு மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் வாதிட்டார்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், ”கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை நீட்டிக்க மறுப்பதற்கு உரிய காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தை நாடும் போதும், நீதிமன்றம் விதிக்ககூடிய நிபந்தனைகளை இதுவரை அவர் மீறவில்லை. எனவே, கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பித்து கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

மேலும், ”புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கார்த்தி சிதம்பரம் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, வழக்கம்போல் உரிய மனுவை தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம்” என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in