டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு... விதிமுறைகளை மீறியதாக புகார்!

ஓபிஎஸ் - தினகரன்
ஓபிஎஸ் - தினகரன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ், தினகரன், நவாஸ் கனி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் ஓபிஎஸ்
வேட்புமனு தாக்கல் செய்யும் ஓபிஎஸ்

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழ்நாட்டில் கடந்த 20 ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளின் சார்பிலும், நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

1,403 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்பு மனுதாக்கலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் போலீஸார் பல்வேறு கட்சிகளின் மீது வழக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தினகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நவாஸ்கனி
நவாஸ்கனி


ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் பாஜக கூட்டணியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே பாஜக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

இவர்கள் மூவரின் மீதும் வேட்பு மனு தாக்கலின்போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் வந்தது,  தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது என்பன உள்ளிட்ட பிரிவுகளில் தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in