பாஜகவா? காங்கிரஸா? - மிசோரம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப் பதிவு!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

மிசோரத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாகவும் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளது. மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. நக்சலைட் பாதிப்பு உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நாளை முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

பாஜக- காங்கிரஸ்
பாஜக- காங்கிரஸ்

நாளை தேர்தல் நடக்கும் இரண்டு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.

சத்தீஸ்கர்: இம்மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் உற்சாகத்துடன் உள்ளது. இதனை உடைத்து வெற்றி பெறும் திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. அம்மாநில காங்கிரஸ் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அதிருப்தியில் இருந்தாலும், பாகேல் தலைமையில் இப்போது பணியாற்ற தொடங்கிவிட்டார். எப்படியும் இம்முறை சத்தீஸ்கரை கைப்பற்றும் திட்டத்துடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆனாலும், இங்கே காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

மிசோரம்: இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கே காங்கிரஸுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. இம்மாநிலத்தில் ஜோரம் மக்கள் முன்னணியும் முக்கிய கட்சியாக உருவெடுத்திருப்பதால் இம்முறை மும்முனைப் போட்டி நடக்கிறது. கருத்துக்கணிப்புகள் இம்மாநிலத்தில் இழுபறி நிலவுமென்றே குறிப்பிட்டுள்ளன. தேர்தலுக்கு பின்னால் ஏதேனும் இரு கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கவே இங்கே வாய்ப்பு அதிமாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in