சிறையில் கேஜ்ரிவால்; வெளியில் டெல்லி, பஞ்சாப் அரசுகளை கவிழ்க்க சதி... பாஜக மீது ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுரப் பரத்வாஜ், "எங்கள் கட்சியின் மூன்று பஞ்சாப் எம்எல்ஏக்கள் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது பெரும்பாலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் சேர அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அர்விந்த் கேஜ்ரிவால் கூறியது இன்று உண்மையாகிவிட்டது. 'ஆபரேஷன் தாமரை' மூலமாக பாஜக ஆம் ஆத்மி கட்சியை அழித்து, டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள எங்கள் அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது" என்று அவர் கூறினார்.

சவுரப் பரத்வாஜ்
சவுரப் பரத்வாஜ்

ஆம் ஆத்மி கட்சியின் ஒரே மக்களவை எம்.பியான சுஷில் குமார் ரிங்கு மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து பஞ்சாப்பை சேந்த மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஜக்தீப் கம்போஜ் கோல்டி, அமந்தீப் சிங் மற்றும் ராஜிந்தர் பால் கவுர் சீனா ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “ ஒரு சர்வதேச எண்ணில் இருந்து பாஜகவில் சேருவதற்கான வாய்ப்புடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் ஒருவருக்கு ரூ.20-25 கோடி தருகிறோம் என்று கூறினார்கள்” என்று குற்றம்சாட்டினர். மேலும், அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் அரவிந்த் கேஜ்ரிவால்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அக்கட்சி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரின் ‘ஆட்சி கவிழ்ப்பு’ குற்றச்சாட்டு டெல்லி, பஞ்சாப்பில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in