10 இன்ஸ்பெக்டர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ... வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ!

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்
பாஜக எம்எல்ஏ ராஜா சிங்

செங்கிசெர்லாவிற்கு செல்ல முயன்ற பாஜக எம்எல்ஏ ராஜா சிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கிசெர்லாவில்  நடைபெற்ற மோதல்
செங்கிசெர்லாவில் நடைபெற்ற மோதல்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள செங்கிசெர்லாவில் உள்ள மசூதி அருகே இந்து அமைப்பினர் ஹோலி பண்டிகை ஊர்வலத்தை நடத்த முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதால் வன்முறை நிகழும் சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மெடிப்பள்ளி போலீஸார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். மார்ச் 24-ம் தேதியுடன் முடிந்து போன இந்த விஷயத்தை பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகள் பிரச்சினையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்
பாஜக எம்எல்ஏ ராஜா சிங்

பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) உறுப்பினர்கள் மார்ச் 25 அன்று போராட்டம் நடத்தினர். இதேபோல், கரீம்நகர் எம்.பி பாண்டி சஞ்சய், ஹைதராபாத் மக்களவை வேட்பாளர் மாதவி லதா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில், செங்கிசெர்லாவிற்கு இன்று (மார்ச் 28) சென்று மளிகைப்பொருட்கள் கொடுக்க இருப்பதாக அறிவித்த கோஷாமஹால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," என்னை வீட்டு வெளியேற போலீஸார் அனுமதிக்கவில்லை. அதை மீறி நான் போகத் திட்டமிட்டேன், ஆனால் 10 இன்ஸ்பெக்டர்கள் வந்து என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகச் சொன்னார்கள். செங்கிசெர்லாவில் இந்துக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். ஹோலி கொண்டாடிய இந்துக்களைத் தாக்கிய அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு மெடிப்பள்ளி காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in