திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்... அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!

அர்ஜூன் சமபத்
அர்ஜூன் சமபத்

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து, கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மத்திய அரசின் திட்டங்களை குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசி பிரச்சாரம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் செல்லும் வாகனங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம், ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தமிழக முதல்வா் ஸ்டாலினும், உதயநிதியும் தொடா்ந்து பொய்களைச் சொல்லி வருகின்றனர்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி பாக்கி எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டியில் 22 சதவீதம் தமிழகத்துக்கு வழங்குகிறது. ஆனால், 28 பைசா மட்டுமே மத்திய அரசு தருவதாக பொய்யான தகவல்களை உதயநிதி கூறி வருகிறார். திமுகவின் தோ்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளது. இந்தியா கூட்டணி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழா்களுக்கும், தமிழகத்துக்கான மாநில உரிமைகளுக்கு துரோகம் செய்தது திமுகதான்" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...   

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in