குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளனர்... ஆளுர் ஷாநவாஸ் ஆவேசம்!

ஆளுர் ஷாநவாஸ்
ஆளுர் ஷாநவாஸ்

குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்களில் எத்தனை எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு விசிக எம்எல்ஏ-வான ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தாங்கள் விரும்பும் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கோரி வருகின்றன. ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டும் அந்தந்த கட்சிகள் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும்,  மற்ற கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கு அவை கேட்கும் சின்னங்களை தர மறுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும், பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னமும் அப்பீலே இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பம்பரம் சின்னம் கேட்டு நீதிமன்றம் வரை சென்று போராடியும் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை.

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒரே மாநிலத்தில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே கேட்கும் சின்னத்தை தர முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.  இந்த நிலையில், அதே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.  அந்த கட்சி தனக்கு தங்களுக்கு பானை சின்னம் கேட்டு என்று தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் அதற்கும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஒரு முந்தைய தேர்தலில் சதவீத வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்று காரணம் கூறியிருக்கிறது

பானை சின்னம் கேட்டு விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி இருக்கிறார்.

‘எங்களது கட்சிக்கு நான்கு எம்எல்ஏ-க்கள் இருக்கிறோம், இரண்டு எம்பி-க்கள் இருக்கிறார்கள். ஆனால் குக்கர் சின்னத்திலும் சைக்கிள் சின்னத்திலும் எத்தனை எம்பி,  எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னங்களை வழங்கும்போது எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது?’ என்று ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் தள பதிவில் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கும் அந்த சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.  தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in