அண்ணாமலை வேட்புமனுவில் சர்ச்சை...அதிமுக, நாம் தமிழர் புகாரால் கலெக்டருக்கு சிக்கல்!

அண்ணாமலைக்கு எதிராக புகார் செய்துள்ள அதிமுக தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
அண்ணாமலைக்கு எதிராக புகார் செய்துள்ள அதிமுக தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.

நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைத்தாளில் தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை களம் இறங்கியுள்ளார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை கோவை மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமாரிடம் தாக்கல் செய்திருந்தார். இந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்ற போது, அண்ணாமலையின் வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக நாம் தமிழர் கட்சியினரும், அதிமுகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணியுடன் வழக்கறிஞர்கள் அணியினர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணியுடன் வழக்கறிஞர்கள் அணியினர்

இதனிடையே அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம், நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் முத்திரைத்தாளில் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவும், நாம் தமிழர் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான் ஜுடிசியல் ஸ்டாம்ப் பேப்பர் என்று அழைக்கப்படும் நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள்களிலேயே இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். எனவே, அண்ணாமலை ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிமுக தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்
அதிமுக தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமாரிடம் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ”அண்ணாமலையின் பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளரின் குற்ற பின்னணி வரிசைப்படுத்தப்படவில்லை. வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடம் குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை. கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்த பின்னர் புதிதாக வேட்பு மனு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் முறைகேடாகும். இவ்வளவு முறைகேடுகளையும் அதிகாரிகள் அண்ணாமலைக்கு சாதகமாக மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன்
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன்

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் விஜயராகவன் கூறுகையில், ”மக்களவைத் தொகுதி உறுப்பினராக அண்ணாமலை ஒருவேளை தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இது முழுக்க முழுக்க வேட்பாளரின் தவறு. அதனை தேர்தல் அதிகாரிகள் சரி பார்க்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம். அவருக்கு செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் வீண்தான். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in