டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்

தீபாவளி பண்டிகையை ஒட்டி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், தீபாவளிக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10% போனஸ் மட்டுமே தரப்படுகிறது. முன்னதாக 20 சதவீதம் போனஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in