மேடையில் உற்சாக நடனமாடிய முதலமைச்சர் சித்தராமையா: ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

மேடையில் நடனமாடிய முதலமைச்சர் சித்தராமையா
மேடையில் நடனமாடிய முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடகா உதயநாளையொட்டி ஹம்பியில் நடைபெற்ற கோலாகல விழாவில் முதலமைச்சர் சித்தராமையா, குழுவினருடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

மைசூர் என்ற பெயர் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு சென்றுள்ளார்.

ஹம்பியில் ‘கர்நாடக சம்பிரமா-50’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சித்தராமையா, நேற்றிரவு ‘வீர மக்களா குனிதா’ குழுவில் இணைந்து நாட்டுப்புற நடனம் ஆடினார். அவரின் நடனத்தை பார்த்து அங்கிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆரவாரம் செய்தனர்.

நடனமாடிய சித்தராமையா
நடனமாடிய சித்தராமையா

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள முதலமைச்சர் சித்தராமையா, நடனமாடும் போது தனது குழந்தைப் பருவ நாட்களை நினைவு கூர்ந்ததாக தெரிவித்துள்ளார். வீர மக்கள் குனிதா என்பது மைசூரு பகுதியில் நடைமுறையில் உள்ள ஒரு நாட்டுப்புற நடன வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in