தனது வீடியோ ஒன்றில் ஆரிஃப் ரகுமான்
தனது வீடியோ ஒன்றில் ஆரிஃப் ரகுமான்

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

யூடியூபர் ஆரிஃப் ரகுமான் என்பவர் தனது காரை விற்று கிடைத்த தொகையில், ஆதரவற்றோர் 350 பேருக்கு தீபாவளி ஆடை உள்ளிட்ட பரிசுகளை வழங்கி அசத்தியுள்ளார்.

மகிழ்வித்து மகிழ் என்பதை வாழ்வின் நோக்கமாக கொண்டவர் சென்னையை சேர்ந்த ஆரிஃப் ரகுமான். சென்னையை சேர்ந்த இவர் தனது சமையல் சார்ந்த யூடியூப் வீடியோக்கள் வாயிலாக தமிழகத்தில் பரிச்சயமானவர். தனது வருமானத்தில் கணிசமான தொகையை கொண்டு இல்லாதவர்களுக்கு உதவுவதில் அலாதி இன்பம் கொண்டவர்.

தனது காருடன் ஆரிஃப்
தனது காருடன் ஆரிஃப்

இந்த வரிசையில், ஆதரவற்றோர் தங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட உதவுவதென்று அண்மையில் முடிவு செய்தார். அதன்படி ஈரோட்டை சேர்ந்த 150 ஹெச்ஐவி பாதித்த குழந்தைகள் உட்பட 350 ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசாக புத்தம்புது ஆடைகள் பரிசளிக்க முடிவு செய்தார். ஆனால் அதற்கான பட்ஜெட்டில் வெகுவாக இடித்தது.

சற்றும் தயங்காது தனது காரை விற்றவர், அதில் கிடைத்த தொகையில் ஆடைகள் வாங்கிக்கொண்டு ஈரோடு கிளம்பினார். ’உணர்வுகள்’ என்ற அமைப்பின் சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீபாவளி ஆடைகளை ஆதரவற்றோருக்கு வழங்கி மகிழ்ந்தார்.

ஆதரவற்றோருக்கு தீபாவளி ஆடைகள் வழங்கும் ஆரிஃப்
ஆதரவற்றோருக்கு தீபாவளி ஆடைகள் வழங்கும் ஆரிஃப்

’கலக்கப்போவது யாரு’ பாலா போன்று விரைவில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க இருப்பதாகவும், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை அரசு அனுமதியுடன் சுற்றுலா அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அந்த நிகழ்வில் ஆரிஃப் மகிழ்வுடன் தெரிவித்தார்.

கோடிகளை குவித்து வைத்திருப்போர் கமுக்கமாய் இருப்பதன் மத்தியில், ஒரே வாகனத்தை விற்று ஆதரவற்றோருக்கு உதவிய ஆரிஃப் ரகுமானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in