அதிர்ச்சி... டெம்போவில் தொங்கியபடி ஆபத்தான பயணம்- உணவுக்காக செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்

நாட்றம்பள்ளி அரசுப்பள்ளி
நாட்றம்பள்ளி அரசுப்பள்ளி
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாணவர்கள் சரக்கு வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் அரசு மாணவர்கள் விடுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களும் உள்ளனர். மதிய உணவு இடைவேளையின்போது, உணவு உண்பதற்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அரசு மாணவர்கள் விடுதிக்கு மாணவர்கள் சென்று விட்டு, பின்னர் மீண்டும் பள்ளிக்கு திரும்புவது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் மாணவர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் லிப்ட் கேட்டு பயணித்துள்ளனர். ஆபத்தான முறையில் சரக்கு வாகனத்தில் பின்புறம் தொங்கியபடி அவர்கள் பயணித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்
ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்

இதுபோன்று ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அரசு பள்ளியின் ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீதும், மாணவர்களை கண்காணிக்க தவறும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in