இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் மார்ச் 25ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில்கள் ரத்து
ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்டிரல்- திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண். 16854), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16853) வரும் மார்ச் 14ம் தேதி வரையில் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போன்று அரக்கோணத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06753), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06754) வரும் 10-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

இதேபோல் திருப்பதியிலிருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06728), மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06727) வரும் 10-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியிலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17407) வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக மன்னார்குடியிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17408) வரும் 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16112) வரும் 12, 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16111) வரும் 11, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in