‘மாசு ஏற்படுத்தும் பட்டாசுக்கு எதிரான நீதிமன்றத்தின் தடை, நாடு முழுமைக்கும் பொருந்தும்’ உச்ச நீதிமன்றம் மீண்டும் விளக்கம்

பட்டாசு
பட்டாசு

’மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு, டெல்லி மட்டுமின்றி நாடு முழுமைக்கும் பொருந்தும்’ என உச்சநீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தி உள்ளது.

’பேரியம் உப்பு மற்றும் அதைப் போன்ற சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதிப்பொருட்களால் தயாரான பட்டாசுகள் உபயோகத்துக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை முறையாக பின்பற்றுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தாக்கலான மனுவை, உச்ச நீதிமன்றத்தின் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணையில், சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசு பயன்பாட்டுக்கு எதிராக பலமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதை அமர்வு நினைவூட்டியது. 'பட்டாசுகளுக்கு முழுமையானத் தடை இல்லையென்றாலும், பேரியம் உப்புகள் உள்ளவைகளுக்குத் தடை விதித்து’ 2021-ம் ஆண்டின் வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதே போன்று பட்டாசு வெடிப்பதற்கு என்று பிரத்யேக நேரம் ஒதுக்கியும், 2018-ம் ஆண்டு வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களில் இரவு 11:55 முதல் நள்ளிரவு 12:30 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

பட்டாசு
பட்டாசு

இன்று விசாரணைக்கு ஆளான, ராஜஸ்தான் அரசுக்கு எதிரான வழக்கில், "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், தற்போது குறிப்பிட்ட உத்தரவு எதுவும் தேவையில்லை. எனவே, ராஜஸ்தான் மாநிலமும் இதைக் கவனத்தில் கொண்டு, காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கட்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நீதிமன்றத்துக்கு மட்டுமே கடமை உள்ளதாக கருத்து நிலவுகிறது. ஆனால், இது அனைவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும்" என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. முக்கியமாக ”பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் 2021-ம் ஆண்டின் ஆணை, டெல்லி மட்டுமின்றி நாடு முழுமைக்கும் பொருந்தும்” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in