வரலாற்று தருணம்... உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, அதிகாரபூர்வமாக சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இன்று நியமிக்கப்பட்டார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பார் கவுன்சில் சார்பில் வரவேற்பும், பாராட்டுதலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவதாக இன்று(அக்.6) அறிவித்தார். செவி மாற்றுத்திறன் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகளின் நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் அப்போது தலைமை நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்

முன்னதாக செப்.22 அன்று, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான வழக்கு ஒன்றில், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் சவுரவ் ராய் சவுத்ரி உதவியுடன், செவி மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னியை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவும், அதற்கு எழுந்த வரவேற்புகளை அடுத்தும், உச்ச நீதிமன்ற விசாரணை நடைமுறைகளுக்கு என பிரத்யேகமாக தற்போது சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சைகை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் செவி மாற்றுத்திறன் வழக்கறிஞர்
சைகை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் செவி மாற்றுத்திறன் வழக்கறிஞர்

சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் மூலம் வழக்கு விசாரணையை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்ததை வழக்கறிஞர்களும், பார் கவுன்சில் அமைப்புகளும் பாராட்டி வருகின்றன. மேலும், உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும், தேவைக்கு ஏற்ப சைகை மொழிபெயர்ப்பாளர் இனி நியமிக்கப்படக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in