அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் அவதி... அதிர வைக்கும் புள்ளிவிபரம்!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் அவதி... அதிர வைக்கும் புள்ளிவிபரம்!

உலகம் முழுவதுமே இந்தியாவையும், மோடி தலைமையையும் பாராட்டியது. நம் நாட்டின் தேவைகள் பூர்த்தியாகாத நிலையிலும், கொரோனா தடுப்பூசிகளை உலகின் பல நாடுகளுக்கும் விநியோகித்தது இந்தியா. இந்நிலையில், அதிர வைக்கும் படியாக இந்தியாவில் சுமார் 67 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக பட்டினி கிடப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் பாய்வதாக மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளி விவரங்களுடன் கூறியது வைரலாகிறது. இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து உயர்ந்து கொண்டே முதலீட்டாளர்களை குஷியாக்குகிறது. இன்னொரு புறம் இந்தியாவில்   வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், சிறுதொழில்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் அதிர வைக்கின்றன.

இந்தியாவில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்கு செல்வதாகவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வைத்து வருகிற குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் விதமாக நாட்டில், 67 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இது பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிற அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையை விட அதிக சதவிகிதம் என்பது முகத்தில் அறைகிற நிஜம்.

கடந்த 2019-2021ம் ஆண்டிற்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு “இ கிளினிக்கல் மெடிசன் இதழ், உணவே கிடைக்காத பட்டினிக் குழந்தைகள் என்ற பெயரில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, காங்கோ, நைஜீரியா நாடுகளில் மட்டுமின்றி நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசத்தை விடவும் இந்திய குழந்தைகள் பட்டினியால் வாடும் சதவிகிதம் அதிகம் என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய குழந்தைகளில் 19.3  சதவிகித குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். இந்த 19.3 சதவிகிதம் என்பது சுமார் 67 லட்சம் குழந்தைகள். இந்தே வங்கதேசத்தில் 5.6 சதவிகிதமாகவும், பாகிஸ்தானில் 9.2 சதவிகிதமாகவும் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

அதிக குழந்தைகள் உணவில்லாமல் பட்டினி கிடக்கும் வரிசையில் உலகளவில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. கினியா (21.8சதவீதம்) முதலிடத்திலும், மாலி (20.5 சதவீதம்) இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in