‘இந்திய - சீன எல்லையை நோக்கி 10,000 பேர் அணிவகுப்போம்...’ புதிய போராட்டத்தை அறிவித்தார் சோனம் வாங்சுக்

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

இந்திய - சீன எல்லையான உண்மையான கட்டுப்பாடு கோடு நோக்கி 10,000 ஆதரவாளர்களுடன் பங்கேற்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் லடாக் போராளி சோனல் வான்சுக்.

சோனம் வான்சுக்கின் போராட்டம் என்னவென்று பார்ப்பதற்கு முன்னர் அவரது சுவாரசியமான பின்னணி குறித்து சற்று அறிந்து கொள்ளலாம். ஷங்கர் இயக்கத்தில், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் 2012-ல் வெளியான திரைப்படம் ’நண்பன்’. விஜய் அதுவரை ஏற்றிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பஞ்சவன் பாரிவேந்தன் என்கிற கொசக்சி பசபுகழ் கதாபாத்திரம், நிஜமான நாயகன் ஒருவரை முன்மாதிரியாக கொண்டு உருவானது.

’நண்பன்’ திரைப்படம்
’நண்பன்’ திரைப்படம்

இந்தியில் வெளியான ’3 இடியட்ஸ்’ திரைப்படத்தை தழுவியே தமிழின் நண்பன் உருவானது. இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் விஜய் நடித்தார். அமீர்கான் - விஜய் ஆகியோர் தோன்றிய அந்த வித்தியாசமான கதாபாத்திரத்தின் நிஜ வடிவமாக லடாக்கில் வாழ்ந்து வருபவரே சோனம் வாங்சுக்! இவரது வாழ்க்கையே 3 இடியட்ஸ் மற்றும் நண்பன் திரைப்படங்களில் புனைவு கலந்து வெளிப்பட்டிருக்கிறது.

‘3 இடியட்ஸ்’ திரைப்படம்
‘3 இடியட்ஸ்’ திரைப்படம்

சோனம் வாங்சுக் லடாக் பிராந்தியத்தில் கல்வி, சுற்றுச்சூழல், சமூகம் சார்ந்த மிகப்பெரும் போராளியாக செயல்பட்டு வருகிறார். காந்தியவாதியான இவர் தனது 21 நாள் உண்ணாவிரத போராட்டத்தை அண்மையில் நிறைவு செய்தார். மைனஸ் 10 டிகிசி செல்சியஸ் உறைபனியில் திறந்தவெளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 21 நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

லே பிராந்தியத்துக்கான மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர் போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் புதிய போராட்டத்தையும் தற்போது அவர் அறிவித்திருக்கிறார்.

இதன்படி இந்தியா - சீனா இடையே உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நோக்கி சுமார் 10,000 பேர் அணிவகுத்துச் செல்லும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இதில் ஈடுபடுவோரை அதிகாரிகள் தடுக்கும் பட்சத்தில் சிறை நிரப்பும் போராட்டமாகவும் அதனை இன்னொரு வடிவில் நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறார்.

அதன் அடுத்த கட்டமாக லடாக் பிராந்தியத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இது நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் எனவும் எச்சரித்துள்ளார். இவை தொடர்பாக அரசு முன்னறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் சோனம் வான்சுக் தலைமையிலான போராட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் மக்கள்வைத் தேர்தல் மும்முரத்தில் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஆழ்ந்திருப்பதால் தங்களது லடாக் பிராந்திய போராட்டங்கள் வெளியுலக கவனம் பெறுவதில்லை சோனம் வாங்சுக் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in