ராஜஸ்தான் கஜினி... 50 ஆண்டுகளில் போட்டியிட்ட 20 தேர்தல்களிலும் தோற்றவர், இம்முறையும் போட்டி!

தீதர் சிங்
தீதர் சிங்

தீதர் சிங்கை ராஜஸ்தானின் கஜினி வேட்பாளர் என்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் போட்டியிட்ட 20 தேர்தல்களிலும் தோல்வியுற்ற வேட்பாளரான இவர் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். 

ராஜஸ்தானின் கரன்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் தீதர் சிங். இதே தொகுதியின் ’25 எஃப்’ என்று அரசு ஆவணத்தில் குறிப்பிடப்படும் குக்கிராமத்தை சேர்ந்தவர் இவர். 1970களில் தொடங்கி கடந்த சுமார் 50 வருடங்களில் இதுவரை 20 தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அனைத்திலும் தோல்வியும் அடைந்திருக்கிறார்.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

ஆனபோதும் தளராத மனத்தோடு 21-ம் முறையாக நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் தீதர் சிங் போட்டியிடுகிறார். உள்ளாட்சி, சட்டப்பேரவை, லோக்சபா என தேர்தல்கள் எதுவானாலும் வேட்பாளர்களின் பட்டியலில் தீதர் சிங் பெயர் இருக்கும். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் டெபாசிட் இழக்கவும் செய்திருக்கிறார்.

தற்போது 78 வயதாகும் தீதர் சிங், கொள்ளுப்பெயரன், பெயர்த்தி பார்த்துவிட்டார். வயிற்றுப்பாட்டுக்கு நூறுநாள் வேலைத்திட்டம் மற்றும் கிராமத்தில் கிடைக்கும் உபரி தினக்கூலி வேலைகளை நம்பியிருக்கிறார். அவரது வாழ்நாள் சேமிப்பு பெரும்பாலும் அடுத்த தேர்தலுக்கான டெபாசிட் தொகையாகத்தான் இருக்கும்.

தீதர் சிங்கை இதர தேர்தல் மன்னன்களோடு ஒப்பிட முடியாது. அவர் விளம்பரத்துக்காகவோ, இதர ஆதாயங்களுக்காகவோ தேர்தலில் போட்டியிடுவதில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த அவரும் அவரை ஒத்தவர்களும், சுதந்திர இந்தியாவில் பல தலைமுறைகளாக நிலமற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். நிலம் கோரி எத்தனையோ கோரிக்கை வைத்தபோதும் அரசு அதிகாரிகள் மனமிரங்கவில்லை.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

நிலமற்றவர்களுக்கு இந்த நாட்டில் மிச்சமிருக்கும் உரிமைகள் என்ன என்று விவரமறிந்தவர்களிடம் விசாரித்தார். அவர்கள் கூறியதில் ’தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது’ தீதர் சிங்கிற்கு பிடித்துப்போனது. தேர்தலில் வேட்பாளராக நிற்பதை, ஒரு குடிமகனுக்கான உரிமையாகவும், நிலமற்ற தங்களுக்கான கோரிக்கையை வலியுறுத்தும் அடையாள போராட்டமாகவும் தீதர் தொடர்ந்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in