ராஜஸ்தானில் குவிந்து கிடக்கும் 115 மில்லியன் டன் தங்கத்தாது... மின் ஏலம் மூலமாக தங்கச் சுரங்கத்துக்கு அரசு அனுமதி

தங்க சுரங்கம் - தங்கம்
தங்க சுரங்கம் - தங்கம்
Updated on
2 min read

ராஜஸ்தான் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பலகோடி டன் தங்கத்தாதுக்களை வெட்டியெடுப்பதற்கான, தங்கச்சுரங்கம் அமைப்பதற்கு மின் ஏலம் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாநில அரசு தொடங்கியுள்ளது.

கனிம வளம் மிக்க இந்தியாவில் நிலத்தடி பெட்ரோலிய எரி பொருட்களுக்கு அப்பால் லித்தியம் உள்ளிட்ட நவீனத் தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் தங்கத்தாதுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் தேவைக்கான தங்கம் பெருமளவில் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதன் மத்தியில், உள்நாட்டிலேயே பலகோடி டன் தங்கம் அடையாளம் காணப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

தங்கப் படிவங்கள்
தங்கப் படிவங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தாமிரத்தை தேடி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, தங்கத்தாதுக்களின் நிலத்தடி இருப்பு வெளிப்பட்டது. பன்ஸ்வாராவின் புக்கியா-ஜக்புரா பகுதியில் தங்கம் அதிக அளவில் இருப்பது அப்பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் புவியியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உறுதியானது.

விரிவான ஆய்வுக்குப் பிறகு, புக்கியா-ஜக்புரா பகுதியில் 940.26 ஹெக்டேர் பரப்பளவில் 113.52 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பதாக ஆரம்ப மதிப்பீடு செய்யப்பட்டது. அவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் தங்க உலோகத்தின் அளவு 222.39 டன் (1 டன் என்பது 1000கிகி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று கன்காரியா-ஜாரா பகுதியில் 205 ஹெக்டேர் பரப்பளவில் 1.24 மில்லியன் டன் தங்கத் தாதுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதன் மத்தியில், 222 டன் தங்கம் இந்தியாவில் கிடைக்கும் என்ற தகவல் பொதுவெளியில் வாய்பிளக்கச் செய்துள்ளது. பொதுவாக தங்கம் கிடைப்பது உறுதியானாலும், அவற்றை அகழ்ந்து, பிரித்தெடுப்பதற்கான செலவை விட பல மடங்கு அதிகமாக தங்கம் கிடைத்தால் மட்டுமே தங்கச் சுரங்கங்கள் செயல்படுவது அர்த்தமாகும். இந்த வகையில் ராஜஸ்தானில் தங்கம் மட்டுமன்றி ​​இணை கனிமங்களும் பிரித்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதால், அகழ்வில் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பாகும் என அனுமானிக்கப்படுகிறது.

ஆப்ரிக்க சுரங்கத்தில் தங்கம்
ஆப்ரிக்க சுரங்கத்தில் தங்கம்

மேலும் தங்கச்சுரங்கம் அமைக்கப்படுவது மற்றும் தங்கத்தாது அகழ்ந்து எடுக்கப்படுவது ஆகியவற்றின் மூலம் பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக் சார்ந்த பல்வேறு தொழில்களில் புதிய முதலீடுகளுடன், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்கான முன்னோடியில்லாத சாத்தியங்கள் அங்கே உருவாக இருக்கின்றன. இதனிடையே இந்த தங்கத்தாது அகழ்வுக்கான தங்கச்சுரங்கம் அமைப்பது தொடார்பாக மின் ஏல செயல்முறையை ராஜஸ்தான் சுரங்கத்துறை நேற்று தொடங்கியது.

இந்த மின் ஏல திட்டத்தின்படி, டெண்டர் ஆவணங்களை மார்ச் 21 வரை வாங்கலாம். தொழில்நுட்ப ஏலங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 12 கடைசி தேதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புக்கியா-ஜக்புரா தங்கச் சுரங்கங்களுக்கான சுரங்க உரிமத்திற்கான ஏலம் மே 2 அன்றும், கன்காரியா-காரா பகுதிக்கான உரிமத்திற்கு மே 3 அன்றும் ஏலம் நடைபெற உள்ளது என சுரங்கத்துறை அறிவித்துள்ளது.

தங்கச்சுரங்கம் நடைமுறைக்கு வரும்போது, உலக தங்கச்சுரங்கங்களில் வரைபடங்களில் ராஜஸ்தான் முக்கிய இடம் பிடிக்கும் எனவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in