பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பெண் குழந்தை... கஸ்டடியில் இருந்தாலும் கேஜ்ரிவால் வாழ்த்து!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டபோது, அர்விந்த் கேஜ்ரிவால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசின் முதல்வராக இருப்பவர் பகவந்த் சிங் மான். இவரது மனைவி டாக்டர் குர்பிரீத் கவுர். இவர் நிறைமாத கரப்பிணியாக இருந்து வந்த நிலையில் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பகவந்த் மான் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடவுள் ஒரு மகளை பரிசாக வழங்கியுள்ளார். தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
பகவந்த் மான் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார். அதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு, டாக்டர் குர்பிரீத் கவுரை சண்டிகரில் ஜூலை 6-ம் தேதி பகவந்த் மான் திருமணம் செய்து கொண்டார்.
குர்பிரீத் கவுர், பகவந்த் மானுக்கு இரண்டாவது மனைவியாவார். பகவந்த் மானின் முதல் மனைவி இந்தர்பிரீத் கவுர். முதல் திருமணத்தின் மூலம் பகவந்த் மானுக்கு ஏற்கெனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 2015-ல் இந்தர்பிரீத் கவுர் - பகவந்த் மான் தம்பதி விவாகரத்து பெற்றனர். இந்தர்பிரீத் கவுருடன் மகன் சீரத் (23), மகள் தில்ஷன் ( 19) ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டபோது, பகவந்த் மானுக்கு மகள் பிறந்ததற்கு, கேஜ்ரிவால் தனது வாழ்த்துகளை செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!
கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!
இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!
’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!