மிசோரமில் விபத்துக்குள்ளான மியான்மர் விமானம்... பயணித்தவர்களின் கதி என்ன?

மிசோரமில் விபத்துக்குள்ளான மியான்மர் விமானம்... பயணித்தவர்களின் கதி என்ன?

மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் 8 பேர் காயமடைந்தனர். தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த டேபிள் டாப் விமானநிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

மிசோரம் லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம் அடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மியான்மர் ராணுவ வீரர்கள் அங்கிருந்து தப்பி இந்திய எல்லை கிராமங்கள் வழியாக நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 276 மியான்மர் ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர்.

மிசோரமில் தஞ்சமடைந்த ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்காக, லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் விமானப் படை விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரில் 8 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in