சீனாவில் 7.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... வீடுகள் சேதம்; ரயில் சேவை பாதிப்பு - டெல்லியிலும் நில அதிர்வு!

அதிர்வு
அதிர்வு

சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் 7.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் வீடுகள் குலுங்கியதால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு சென்றுள்ளனர்.

கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் 80 கிமீ ஆழத்தில் தெற்கு ஜின்ஜியாங்கில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் தாக்கம் ஜின்ஜியாங்கில் இருந்து சுமார் 1,400 கிலோமீட்டர் தொலைவில் டெல்லியிலும் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 மணி முதல் 12 மணிக்குள் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியதோடு, உருண்டு விழுந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் விரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.

 நிலநடுக்கம்
நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை. 7.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதால் சேதம் அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in