ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!

அயோத்தி ராமர் கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கூட்டம்.
அயோத்தி ராமர் கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கூட்டம்.

அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை 3 மணி முதலே கட்டக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

அயோத்தி ராமர் கோயிலில் மூலவர் பால ராமர் சிலை பிரான பிரதிஷ்டை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பிரதிஷ்டை விழா பூஜையை செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதுமிருந்து துறவியர்கள், மடாதிபதிகள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமான விவிஐபிக்கள் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோயிலில் இன்று காலை முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அயோத்தி கோயிலில்காலை 7 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
ராமர் கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

இந்நிலையில் அயோத்தி ராம பகவானை தரிசிக்க, கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் இன்று அதிகாலை 3 மணி முதலே கோயிலில் திரண்டது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கோயிலில் ஏராளமான பாதுகாப்பு படைவீரர்கள், போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'ஆரத்தி'க்கான சீட்டுகளை நேரிலும், இணையதளம் மூலமும் பெறலாம். நேரில் ஆரத்தி சீட்டுகளை வாங்க விரும்புவோர், ராமர் கோயிலில் உள்ள முகாம் அலுவலகத்தில், அரசு வழங்கியுள்ள தங்களது அடையாள அட்டை சான்றை காண்பித்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in