தெலங்கானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கை இந்து முறைப்படி முஸ்லிம் பெண் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள யாதாத்ரி மாவட்டம், புவனகிரி மண்டலத்தில் உள்ள ராய்கிரியைச் சேர்ந்தவர் சோட்டு மியா. இவரது மனைவி யாகூப் பீ. இவர்கள் இருவரும் நீண்டகாலமாக சமூக சேவை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சோட்டு மியா உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு முதியோருக்கான இல்லத்தை கடந்த 15 ஆண்டுகளாக யாகூப் பீ நடத்தி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு சந்திரகலா(72) என்ற மூதாட்டி முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்தார். கணவர் இறந்த காரணத்தால், முதியோர் இல்லத்தில் அவர் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக மூதாட்டி சந்திரகலா முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டி சந்திரகலா உடல்நலம் குன்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்குகளை முஸ்லிம் பெண்ணான யாகூப் பீ செய்துள்ளார். நீர் மாலை எடுத்து இந்து முறைப்படி சந்திரகலாவிற்கான இறுதிச் சடங்குகளை செய்த யாகூப் பீயின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!
கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!
இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!
’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!