
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போஹா உணவு விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகள் மாதம் ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார்கள்.
திருநெல்வேலி அல்வா, மும்பை வடபாவு என்பது போல் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போஹா உணவு ரொம்ப புகழ் பெற்றது. இது அவல், வேர்க்கடலை போன்றவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு. இந்தூர் சாலை ஒரங்களில் தள்ளுவண்டிகளில் போஹா விற்பனை செய்வார்கள்.
இந்த மாதிரி ஒரு தள்ளுவண்டியில் விற்பனை செய்பவர்கள் தினமும் 2500 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கிறார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருக்கும் பல தனி நபர்கள் கூட, தள்ளுவண்டியில் போஹா விற்பனை செய்யும் தெரு வியாபாரிகள் ஈட்டும் இந்த வருமானத்துக்கு சமமாக கூட சம்பாதிக்க முடியாது.
தள்ளுவண்டியில் போஹா விற்பனை செய்யும் ஒருவர், நான் ஒரு வண்டியில் இருந்து தினமும் ரூ.2,500 சம்பாதிக்கிறேன். மொத்தம் 6 வண்டிகளில் போஹா வியாபாரம் செய்து மாதந்தோறும் ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கிறேன் என்று தெரிவித்தார். சாலையோர வியாபாரியின் கணக்குப்படி பார்த்தால், அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.54 லட்சம் லாபம் சம்பாதிக்கிறார். இரண்டே வருடத்தில் அவராக வருமானம் ரூ.1 கோடியை தொடுகிறது.
இது போன்ற அமைப்புசாரா துறையை சேர்ந்தவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆரம்பித்தால், அது தேசத்தின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே... கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!