பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள்: லாலுவின் கூட்டணிக் கணக்கு!

 லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

வரும் மக்களவைத் தேர்தலில் பீகாரில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகளை ஒதுக்க லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களுடன் லாலு பிரசாத் யாதவ் (வலமிருந்து 2வது)
காங்கிரஸ் தலைவர்களுடன் லாலு பிரசாத் யாதவ் (வலமிருந்து 2வது)

பீகாரில் மாநில அளவில் மகாபந்தன் கூட்டணியில் (தேசிய அளவில் இந்தியா கூட்டணி) ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை ஒதுக்க ஆர்ஜேடி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கிஷன்கஞ்ச், கதிஹார், சசாரம், பாட்னா சாஹிப், பெடியா, முசாபர்பூர், சமஸ்திபூர், பாகல்பூர் மற்றும் மாதேபுரா அல்லது சுபால் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

பீகார்
பீகார்

காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்படும் அதே வேளையில் ஆர்ஜேடிக்கு, அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தின் சத்ரா, பலாமு தொகுதிகளில் போட்டியிட ஆர்ஜேடி விருப்பம் தெரிவித்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் ஜார்க்கண்ட் எதிர்பார்ப்பை காங்கிரஸ் பூர்த்தி செய்யவில்லை என்றால் பீகாரில் அக்கட்சிக்கு 6 அல்லது 7 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தங்கள் தலைவர் திட்டமிட்டுள்ளதாக ஆர்ஜேடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in