சுத்தமான ஆக்ஸிஜன்... குளு குளு வகுப்பறை... தனி மனிதனாய் சாதித்த பள்ளி ஆசிரியர்... குவியும் பாராட்டுக்கள்!

வகுப்பறைக்குள் தோட்டம் அமைத்து அசத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்
வகுப்பறைக்குள் தோட்டம் அமைத்து அசத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்

கேரளாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், இந்த வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை தப்புவிக்க வகுப்பறையை தோட்டமாகவே மாற்றியமைத்து, மாணவர்கள் மூலமாகவே பராமரித்து வருவது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மோக்கேரி பகுதியில் ராஜீவ் காந்தி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தனியார் பள்ளியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் திலீப்பின் முன்னெடுப்பு தற்போது கேரள பெற்றோர்களிடையேயும், பிற ஆசிரியர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் திலீப், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை புற்கள் குறித்து ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ளார். தற்போது கேரளாவில் பரவலாக காணப்படும் ஈந்து பனை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதல்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கேரள மாநிலம் கன்னூரில் உள்ள ராஜீவ் காந்தி மேல்நிலைப்பள்ளி
கேரள மாநிலம் கன்னூரில் உள்ள ராஜீவ் காந்தி மேல்நிலைப்பள்ளி

தான் பணியாற்றி வரும் பள்ளியில், வெயில் காலங்களின் போது மாணவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவதை கண்டு வருத்தம் அடைந்த திலீப், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்தார். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் பயிற்றுவித்து வந்த வகுப்பறையின் உள்ளே செடி, கொடிகளை வளர்க்க முடிவு செய்தார். இதன்படி மாணவர்களுடன் இணைந்து வகுப்பறை முழுவதும் சிறிய ரக நாட்டின செடிகளை அவர் நட்டு பராமரித்து வருகிறார். இதற்காக பிளாஸ்டிக் தொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்.

மாணவர்களுக்கு இயற்கையின் மேன்மையை உணர்த்தும் வகையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு இயற்கையின் மேன்மையை உணர்த்தும் வகையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள்

அதன்படி பள்ளியில் நடத்தப்படும் நாடகங்களில் பயன்படுத்தப்பட்டு வீணான பொருட்கள், உடைந்த மேசைகளின் கால்கள் மற்றும் சாக்கு பைகள் ஆகியவற்றை கொண்டு இந்த செடிகளுக்கான தொட்டிகளை அவரே தயார் செய்துள்ளார். இந்த செடிகள் அமைக்கப்பட்டதன் காரணமாக வகுப்பறைக்குள் பல மடங்கு வெப்பம் குறைந்திருப்பதை உணர முடிவதாக மாணவர்களும், சக ஆசிரியர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வகுப்பறைகள் வளர்க்கப்படும் செடிகள் அத்தனையும் அபரிமிதமாக ஆக்ஸிஜனை வெளியேற்றுபவை என்பது கூடுதல் தகவல். ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளேயும் 100க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து, மாணவர்களின் உதவியுடன் பராமரித்து வருகிறார் திலீப். வகுப்பறைக்குள் அதிகளவில் ஆக்ஸிஜன் இருப்பதால், மாணவர்களும் உற்சாகமாக பாடத்தைக் கவனிக்கிறார்கள்.

ஆசிரியர் திலீப்
ஆசிரியர் திலீப்

இது குறித்து தகவல் அறிந்ததும் கன்னூர் மற்றும் கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தங்களது பள்ளி வகுப்பறைகளிலும் இதே போன்று திட்டத்தை செயல்படுத்தி தர வேண்டுமென திலீப்பிடம் வலியுறுத்தியுள்ளனர். இதன் பேரில் தற்போது வரை மூன்று பள்ளிகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து பள்ளிகளிலும் இவற்றை செயல்படுத்த முயற்சி எடுத்து வருவதாகவும் திலீப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திலீப்பன் இந்த முயற்சி காரணமாக பள்ளிக்கு வரும் தேர்வு கண்காணிப்பாளர்கள் இந்த வகுப்பறைகளில் பணியாற்றுவதை விரும்புகின்றனர்.

தற்போது இந்த பள்ளியில் 84 வகுப்பறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அனைத்து வகுப்பறைகளையும் இதே போன்ற பசுமையான சூழலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது பள்ளி நிர்வாகம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகளில், நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை இயற்கை சூழலுக்கு மாற்றவும் முயற்சிப்பது மிகவும் பலன் அளிக்கக்கூடிய ஒன்று. வகுப்பறை என்பது வெறும் கல்வி பயிலும் அறையாக மட்டுமில்லாமல், சமூக விழுமியங்களை கற்றுக் கொடுக்கும் இடமாகவும் மாறும்போது, ஒட்டுமொத்த சமூகமும் அதனால் பயன்பெறும் என்பது திலீப்பின் இந்த முயற்சியின் மூலமாக உறுதியாகிறது. நம் மாநிலத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கவனிப்பாரா?

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in