பணம் இல்லாததால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஷாக்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடும் வாய்ப்பை மறுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிர்மலா சீதாராமன்
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிர்மலா சீதாராமன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பங்கேற்றார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து அந்நிகழ்ச்சியில் அவர் பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நான் ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பாஜக தலைவர் ஜே.பி. நட்டா வாய்ப்பை வழங்கினார். ஆனால் ஒரு வாரம், 10 நாள்கள் யோசித்த பிறகு, நான் போட்டியிடவில்லை என சொல்ல திரும்பிச் சென்றேன். போட்டியிட என்னிடம் பணம் இல்லை. ஆந்திரப் பிரதேசமாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி, எனக்கு ஒரு சிக்கலும் உள்ளது. இது அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு வெற்றித்திறன் அளவுகோல்களின் கேள்வியாகவும் இருக்கும். 'நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா அல்லது அந்த மதத்தைச் சேர்ந்தவரா? நீங்கள் இதில் இருந்து வந்தவர்களா?' என்றெல்லாம் கேட்டார்கள். நான், இல்லை என்று சொன்னேன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனது வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். எனவே நான் போட்டியிடவில்லை.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தொடர்ந்து, 'நாட்டின் நிதியமைச்சரிடம் ஏன் தேர்தலில் போட்டியிட போதுமான நிதி இல்லை' என கேட்டதற்கு, "இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி தனக்கு சொந்தமானது அல்ல" என்றார். மேலும் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தற்போதுள்ள பல மாநிலங்களவை உறுப்பினர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதில் பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அடங்குவர். ராஜ்யசபா எம்.பியாக உள்ள எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in